Sunday, 1 February 2015

சந்திர மேகலா



சந்திரு. தனது காதலியை வழக்கமாக சந்திக்கும் பார்க்கிற்கு வர சொன்னான். அப்பனு பார்த்து அவன் பாஸ் முன் அறிவிப்பு இன்றி வீடு தேடி வந்தார். ஒண்ணுமில்லை. அவர் தங்கைக்கு கல்யானம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. கல்யான பத்திரிகையை கொடுக்க வீட்டிற்க்கு வந்தார். ஒரு முதலாளி போல் அல்லாமல் நண்பரை போல் சந்திருவின் அதிகாரி பரத்வாஜ் பழகுவார். சந்திருவிடம் மட்டும். காரணம். சந்திரு இதற்க்கு முன் யாருக்கோ அடிபட்டது என்று உயிரை காப்பாற்ற ரத்தம் கொடுத்தான். பார்த்தால் அந்த யாரோ, வேறு யாரோ அல்ல. அவன் முதலாளி பரத்வாஜ். பின்னர் பரத் வாஜ்க்கு உண்மை தெரிந்தது. அதுக்கு அப்புறம் அந்த கம்பனியில் முதலாளிக்கு உள்ள அனைத்து மரியாதை, அதிகாரம், செல்வாக்கும் சந்திருக்கு வந்தது. அந்த கம்பனி ஆஃபீஸ் ஸ்டாப்பா இருந்த சந்திரு அந்த கம்பனியின் Co ஆனான்.
வெரும் ரத்தம் கொடுத்ததற்காக நமக்கு இந்த பதவி வந்தது என்பதை போல் பிறர் நம்மை பேச கூடாது என்று அல்லும் பகலும் கடுமையாக கம்பனியின் வளர்சிக்காக அவன் உழைத்தான். அவனது பல புது வித யுக்திகளால் அந்த கம்பனி எங்கயோ போனது. ஒரு நாள் பரத்வாஜ் சந்திருவை சந்தித்து. நான் எப்படி இருந்தாலும் என் தங்கச்சியை யாரோ ஒருத்தனுக்கு கட்டி கொடுக்க போகிறேன். அந்த யாரோ ஒருத்தன் ஏன்? நீயா இருக்க கூடாதுனு அவர் கேட்டவுடன். சந்திரு துளி கூட பதட்டப்படாமல், பயப்படாமல் நான் ஏற்கனவே ஒரு பெண்ணை மூன்று வருடங்களாக காதலித்து கொண்டு இருக்கிறேன். அவள் சாதாரண குடும்பத்தை சேர்ந்த பெண் தான். ஆனால் இக்கால பெண்கள் யாருக்குமே இல்லாத அசாதாரனமான நர் குணங்கள் வாய்ந்தவள் அவள். அவளுக்கு என்னால் திரோகம் செய்ய முடியாது. என்று சொன்னதும். பரத் வாஜ் முகம் மாறியது.
நம்பளே தேடி வந்து, என் தங்கச்சியை உனக்கு தரேன்னு சொல்லியும் துளி கூட இவனுக்கு முதலாளினு பயமும் இல்லை. பணத்தின் மேல் ஆசையும் இல்லை. ஆசை, பயம் இரண்டும் இல்லாத மனிதனா? என்று பரத்வாஜ் ஆச்சரியத்து அதிசயித்து. சந்திரு மேல் அவருக்கு உள்ள அன்பு வெறும் அன்பாக இல்லாமல் மரியாதை கலந்த அன்பாக மாறியது.
அத்தகையவர் வீடு தேடி வந்து இருக்கும் பொழுது சந்திருவால் என்ன செய்ய முடியும். தனது பதட்டம் எதையும் அவன் வெளி காட்டி கொள்ளவில்லை. பரத்வாஜ். நீண்ட நேரம் அவனுடனும் அவன் அம்மா, அப்பா, தம்பி என்று அனைவரிடமும் பேசி கொண்டு இருந்தார். பரத் வாஜ்ஜின் மனைவி தீபிகாவும் உடன் வந்திருந்தாள். உனக்கு எப்போ கல்யாணம் என்று பரத் சந்திருவை பார்த்து கேட்க்க. சந்திரு - என் காதலியின் அக்காவிற்கு இப்பொழுது தான் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் ஐந்தாம் தேதி நிச்சயதார்த்தம். முதல் பத்திரிகை உங்களுக்கு தான் கொடுப்பேன் என்று சொல்ல. பரத் வாஜும் மிக்க மகிழ்ச்சி என்று சொன்னபடியே அங்கிருந்து கிளம்பினார்.
அவர் கிளம்பிய அடுத்த நொடி தனது புல்லட் வண்டியில் மின்னல் வேகத்தில் பார்க்கிற்கு வந்தான்.
ஒண்டரை மணி நேரம் லேட். தனது காதலியை பார்த்து மேகலா செல்லம். நான் லேட் ஆக்கிட்டேன்னு உனக்கு எதுவும் கோவம் இல்லையே என்று அவன் கேட்க்க. அவள். உங்களுக்காக நான் எத்தினை வருடங்கள் வேண்டுமானாலும் இதே இடத்தில் காத்து இருப்பேன். உங்களிடம் கோபப்படும் உரிமையும் எனக்கு இல்லை. அன்பையும், அடக்கத்தையும், பக்தியையும் காட்டும் உரிமையே எனக்கு உண்டு என்று அவள் சொன்னாள்.
இது வெறும் எனது கற்பனையில் உதித்த கதை தான். உண்மை சம்பவம் அல்ல. ஆனால்? இந்த கதையில் வருவதை போன்ற பெண் கதாபாத்திரங்கள் சிலரை நான் எனது வாழ்க்கையில் பார்த்து இருக்கிறேன்.
மொள்ளமாரிகள் நமது நாட்டில் அதிகரித்தும் வானம் மும்மாரி பெய்ய காரணமே இந்த சந்திரு, மேகலா போல் சிலர் வாழுவதால் தான்.
Story by
HV Krishna Prasad.

No comments:

Post a Comment